2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

மஹிந்தவுக்கு வந்த முக்கிய கடிதம்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 27 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.பி.கே.மாயாதுன்னேவினால், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

வீட்டு வாடகை, மின் மற்றும் குடிநீர்க் கட்டணங்களைச் செலுத்தத் தவறியுள்ள எம்.பிக்களிடம் இருந்து நிலுவைத் தொகையை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறே அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாராளுமன்ற குழுக்களின் ஊடாக கட்டணம் செலுத்த தவறிய எம்.பிக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பத்து எம்.பிக்கள் தாங்கள் பயன்படுத்திய குடியிருப்புகளுக்கான வாடகையை செலுத்த தவறியுள்ளதாக தெரியவருகிறது.

ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக கட்டணைத்தை இலங்கை மின்சார சபைக்கு அவர்கள் செலுத்த வேண்டும் என்று தெரியவருகிறது.

அத்துடன், ஏறக்குறைய 60 எம்.பிக்கள் நீர் கட்டணத்தை செலுத்த தவறியுள்ளனர் என்று, 
நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .