2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மஹிந்தவைப் பதவியிறக்குவதற்கு ‘புலியே சூழ்ச்சி செய்தது’

Editorial   / 2018 டிசெம்பர் 28 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்   

தேர்த​ல்களை நடத்தாமல், ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் தொடர்ந்தும் காலந்தாழ்த்தி வருமாயின், அந்த அரசாங்கத்தை மீண்டும் கவிழ்ப்போமென எச்சரிக்கை விடுத்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, தமிழீழ விடுதலைப் புலிகளின் சூழ்ச்சியே, பிரதமர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை நீக்கியதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.

புஞ்சி பொரளையிலுள்ள சுதந்திர ஊடகக் கேந்திர நிலையத்தில் நேற்று(27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.   

அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர், அரசாங்கத்தின் இடைக்கால கணக்கறிக்கைக்கு, 102 நாடாளுமன்ற உறுப்பினர்களே ஆதரவளித்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதற்கு ஆதரவளித்திருந்தனர். இதனூடாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, மூன்றிலிரண்டு பெரும்பான்மை இல்லை என்பது உறுதியாகியுள்ளது என்றார்.   

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக கொண்டுவரப்பட்ட நம்பிக்கைப் பிரேரணைக்கும், இடைக்கால கணக்கறிக்கைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளித்திருந்தது. ரணிலுக்கு ஆதரவாக தொடர்ந்து செயற்படும் கூட்டமைப்பு, ​எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோருவதற்கு தகுதியற்றது என்றார்.   

மேலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு சிங்கள மக்களின் பேராதரவு இருக்கிறது என்பதால், கூட்டமைப்பு தொடர்ந்து மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராகச் செயற்பட்டால், கூட்டமைப்பு மீதான சிங்கள மக்களின் எண்ணம், மாறிவிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.  

ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து ரணில் விக்கிரமசிங்கவுக்கான பெரும்பான்மையை நிரூபித்திருந்தார்கள்.

இதனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தை அமைக்க வாய்ப்பளித்திருந்தார். எனினும், தற்போது ரணிலுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை இல்லை என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம் என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .