2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மஹிந்தானந்தவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Editorial   / 2018 ஒக்டோபர் 29 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 7ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோன் முன்னிலையில் விசாரணைக்கு எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், சம்பத் அபேகோன் இன்று விடுமுறையில் இருப்பதால், இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைப்பதாக கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

மஹிந்தானந்த அமைச்சராகப் பதவி வகித்த கடந்த ஆட்சி காலகட்டத்தில் சட்டவிரோத முறையில் சம்பாதித்ததாக நம்பப்படும் 27 மில்லியன் ரூபாய் செலவில், கொழும்பு- கின்ஸி வீதியிலுள்ள வீடொன்றை கொள்வனவு செய்ததன் மூலம், நிதி சலவைச் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்பட கூடிய குற்றத்தை செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தி மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக  சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .