2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

மாணவனைக் காணவில்லை

Editorial   / 2018 செப்டெம்பர் 24 , பி.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சுஜிதா

லிந்துலை, மட்டுக்கலைத் தோட்டம், லென்தோமஸ் பிரிவைச் சேர்ந்த கோபால்ராஜ் வெங்கடேஷ் டில்ஷான் (வயது 16) என்ற மாணவனை, வியாழக்கிழமை (20) முதல் காணவில்லையென, சிறுவனின் பெற்றோர், லிந்துலை பொலிஸில் முறைப்பாடுச் செய்துள்ளனர்.

மேற்படி மாணவன் நு/சென் கூம்ஸ் தமிழ் மகா வித்தியாலயத்தில், தரம் 11இல் கல்வி கற்று வருபவரென்றும், இம்முறை கல்வி பொதுத்தர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளார் என்றும் அறிவிக்கப்படுகிறது.

குறித்த மாணவன் இறுதியாக நீல நிற டீ-சேர்ட்டும் செம்மண் நிற (Brown) முக்காற்சட்டையும் ( Three quarter) அணிந்திருந்தார் எனவும், சுமார் 5 அடி உயரத்தை உடையவர் என்றும், முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவன் தொடர்பில் தகவல்கள் தெரிந்தவர்கள், லிந்துலை பொலிஸ் நிலையத் தொலைபேசி இலக்கமான 052- 2258340 என்ற இலக்கத்துக்குத் தொடர்புகொண்டு அறியத்தருமாறு, பொதுமக்களிடம் பொலிஸார் கோரியுள்ளனர்.
மாணவனைத் தேடும் பணியில், பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X