2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மாத்தறை- கதிர்காமம் ரயில் பாதையின் முதற்கட்டம் நிறைவு

Editorial   / 2018 ஒக்டோபர் 23 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறையிலிருந்து கதிர்காமம் வரை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள ரயில் பாதையின் முதற் கட்டமான 26 கிலோமீற்றர் வரையான மாத்தறை- பெலியத்த ரயில் பாதையை அமைக்கும் பணிகள் நிறைவு செய்யப்பட்டு, டிசம்பர் மாதம் 21ஆம் திகதி அதனை கையளிக்கவுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அமைக்கும் பணியின் பிரதான ஒப்பந்த நிறுவனங்களான சைனா மெசினரி ஏற்றுமதி,இறக்குமதி கோர்பரேடிவ் நிறுவனம் மற்றும் சைனா ரயில் சேர்சவிஸ் நிறுவனம் என்பன இலங்கை ரயில்வே திணைக்களத்திடம் இதனைத் தெரிவித்துள்ளன.

சீனாவின் எக்சிம் வங்கியின் நிதியுதவியின் கீழ் 278.2 அமெரிக்க டொலர் செலவில் அமைக்கப்பட்டு வரும் இந்த ரயில் பாதை உரிய தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளதா என்பதை ஆராய பரிசோதனை ரயில்  சேவைகள் பல முன்னெடுக்கப்பட்டு அடுத்த வருடம் முற் பகுதியில் பொதுமக்களிடம் ரயில் பாதையை கையளிக்க எதிர்பார்ப்பதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

உப ரயில்வே நிலையங்கள் இரண்டைத் தவிர ஏனைய அனைத்து ரயில்வே நிலையங்களிலும் 3 ரயில் மேடைகள் அமைக்கப்படவுள்ளதுடன், இந்த ரயில் பாதையின் பிரதான ரயில்வே நிலையமான பெலியத்த ரயில் நிலையத்தில் 110 மீற்றர் நீளமான கட்டடம், 250- 300 மீற்றர் நீளமான 3 ​ரயில் மேடைகள் என்பன அமைக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .