Editorial / 2025 ஜூலை 11 , பி.ப. 01:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
குண்டாந்தடியால் மாமா தனது மருமகன் மீது தாக்குதல் நடத்தியதில், மருமகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம், தெஹியோவிட்டவில் இடம்பெற்றுள்ளது.
தெஹியோவிட்ட பம்போகம தோட்டத்தில் புதன்கிழமை (09) ஒரு கொலை நடந்துள்ளதாக தெஹியோவிட்ட பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இறந்தவர் அந்தத் தோட்டத்தைச் சேர்ந்த சுமார் 45 வயதுடைய தினேசன் செல்வராஜ் என்பவராவார். அவர் திருமணமானவர்.
சந்தேக நபரான 85 வயதான மாமாவுடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால், மருமகனின் தலை மற்றும் நெஞ்சில் மாமா தாக்கியுள்ளார். இதனால், அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தெஹியோவிட்ட பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர், அவிசாவளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட விருந்தார். என தெரிவித்த தெஹியோவிட்ட பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
42 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
3 hours ago
3 hours ago