2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

மாலைதீவுகளின் ஜனாதிபதித் தேர்தல்: கொழும்பிலும் வாக்களிப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 24 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலைதீவுகளின் அடுத்த ஜனாதிபதியைத் தேர்வுசெய்வதற்கான ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பு நேற்று (23) இடம்பெற்ற நிலையில், கொழும்பிலும் வாக்கெடுப்பு இடம்பெற்றது. 

இலங்கையில் வாழும் மாலைதீவுகளைச் சேர்ந்தவர்கள், கொழும்பிலுள்ள, இலங்கைக்கான மாலைதீவுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திலும் வேறு சில நிலையங்களிலும், தமது வாக்குகளை அளித்தனர். 

கல்வித் தேவைகளுக்காகவும் ஏனைய தேவைகளுக்காகவும், மாலைதீவுகளைச் சேர்ந்த கணிசமான மக்கள் இலங்கையில் வாழ்கின்ற நிலையில், 2,788 பேர், கொழும்பில் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்தனர். இந்நிலையில், மாலைதீவுகள் உயர்ஸ்தானிகரகத்தில், மிக நீண்ட வரிசையில் நின்று, மக்கள் வாக்களித்ததைக் காணக்கூடியதாக இருந்தது. 

இவ்வாறு வாக்களித்தோரில், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் துனிய மௌமூன், முன்னாள் முதற்பெண்மணி நஸ்ரீனா இப்ராஹிம் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர். மாலைதீவுகளில், ஜனநாயக ரீதியாகத் தெரிவுசெய்யப்பட்ட முதலாவது ஜனாதிபதியான மொஹமட் நஷீட், இலங்கையிலேயே வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

மாலைதீவுகளில் நடைபெறும் இத்தேர்தல், அந்நாட்டின் தற்போதைய ஜனாதிபதியும் கடும்போக்கானவராகக் கருதப்படுபவருமான அப்துல்லா யமீனே வெற்றிபெறுவார் எனவும், இது நியாயமான தேர்தலாக இருக்காது எனவும், சர்வதேச ரீதியில் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றுக்கு மத்தியிலேயே, வாக்கெடுப்பு இடம்பெற்றது. 

(படப்பிடிப்பு: நிமல்சிறி எதிரிசிங்க) 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X