2025 ஜூலை 05, சனிக்கிழமை

மின்சார ரயில் கட்டமைப்பை நீடிக்க திட்டம்

Editorial   / 2019 ஜனவரி 08 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெயாங்கொடையிலிருந்து பாணந்துறை வரை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள மின்சார ரயில் கட்டமைப்பை ரம்புக்கனை வரை நீடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான வன திறன் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கமைய, ரயில் கட்டமைப்பை விரைவாக ஆரம்பிப்பதற்கு முடியுமென, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

நாரஹேன்பிட்டியில் நேற்று இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டப் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த மின்சார ரயில் கட்டமைப்புக்காக ஆசிய அபிவிருத்தி வங்கி 600 பில்லியன் டொலரை உதவியாக வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த ரயில் கட்டமைப்புக்காக வன திறன் ஆய்வுகளை மேற்கொள்ள 1 பில்லியன் டொலர் கிடைத்ததாகத் தெரிவித்த அவர், குறித்த ஆய்வுகள் நிறைவடைந்து இடங்களைப் பொறுப்பேற்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதால், இன்னும் சில வருடங்களில் மின்சார ரயில் சேவையில் ஈடுபடுமென்றும் இதற்கான வேலைத்திட்ட அலுவலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .