2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

Editorial   / 2018 ஒக்டோபர் 29 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜூட் சமந்த

சிலாபம் பகுதியில், பெருந்தோட்டக் கம்பனிக்கு சொந்தமான, பலுகஸ்வெவ தோட்டத்தைச் சேர்ந்த, 15 வயதுடைய சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம், நேற்று இரவு (28), இடம்பெற்றுள்ளதென, ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுவன், ​தனது குடியிருப்புத் தொகுதிக்குப் பின்னால் நீராடச் சென்றுள்ளார். இதன்போது, பாதுகாப்பற்றமுறையில் பொருத்தப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி உயிரிழந்துள்ளாரென பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த சிறுவனின் சடலம், பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு  வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .