2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

மின்னுயர்த்தி (Lift) இடிந்து விழுந்ததில் இளைஞர் பலி

Janu   / 2025 ஏப்ரல் 30 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி, பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள கட்டிடத்தின் மின்னுயர்த்தி (Lift) இடிந்து விழுந்ததில் குறித்த வணிக வளாகத்தில் பணிபுரிந்த இளைஞன், பலத்த காயமடைந்து காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் செவ்வாய்க்கிழமை (29) உயிரிழந்துள்ளார்.   

அக்மீமன பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தரைதளத்தில் இருந்து மூன்றாவது மாடிக்கு பொருட்களை ஏற்றிச் சென்றபோது, ​​ மூன்றாவது மாடியில் இருந்து இடிந்து விழுந்த  மின்னுயர்த்தி கீழ் தளத்தில் இருந்த இளைஞன் மீது விழுந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .