Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 12, வியாழக்கிழமை
Freelancer / 2022 மே 21 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
2021 க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை முடிவடையும் வரை மின்வெட்டை அமுல்படுத்துவதை தவிர்க்குமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அறிவித்துள்ளது.
இந்தக் காலப்பகுதியில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு போதுமான எரிபொருள் மற்றும் நீர் வளங்களை உறுதிப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
மே மாதம் 23 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 01 ஆம் திகதி வரை மாலை 6.30 மணிக்குப் பின்னர் மின்வெட்டை அமுல்படுத்துவதைத் தவிர்க்குமாறு ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அறிவித்துள்ளது.
மே மாதம் 21, 22 மற்றும் 29 ஆம் திகதிகளில் மாலை 06 மணிக்குப் பின்னர் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாதென ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
1 hours ago