2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மிருசுவில் படுகொலையாளி விடுதலை: ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு

Editorial   / 2020 ஏப்ரல் 21 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிருசுவிலில் அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று குவித்தமை உறுதிப்படுத்தப்பட்ட கொலையாளி சுனில் ரத்னாயக்கவை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்தமைக்கெதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பில் சட்டத்தரணி கேசவன் சயந்தனால் இவ்வழக்கு, நேற்று (20) காலை, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொலை செய்தமை உறுதிசெய்யப்பட்டு, மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியை, பொதுமன்னிப்பில் ஜனாதிபதி விடுதலை செய்தமையூடாக தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியே மேற்படி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணைக்கு வரும்போது ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், இவ்வழக்கில் ஆஜராகவுள்ளமை குறிப்பிடத்தக்கது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X