2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

மீகொட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

Editorial   / 2024 டிசெம்பர் 15 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 மீகொட, நாகஹவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 32 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட நபர் தனது சகோதரரின் வீட்டிலிருந்து மீகொடவில் உள்ள தனது சொந்த வீட்டிற்கு சனிக்கிழமை (14) காரில் சென்று கொண்டிருந்த போதே இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரை இனந்தெரியாத நபர் ஒருவர் தடுத்து நிறுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். துப்பாக்கிச் சூடு நடந்த போது பாதிக்கப்பட்டவரின் மனைவி மற்றும் ஒன்றரை வயது மகளும் வாகனத்தில் இருந்தனர்.

பலத்த காயங்களுக்கு உள்ளான நபர் ஹோமாகம வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தாக்குதல் நடத்தியவர்கள் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், மீகொட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X