Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Gavitha / 2020 மார்ச் 16 , பி.ப. 09:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தாக்கத்தால், நாட்டில் ஏற்பட்டிருக்கும் பரபரப்பான சூழ்நிலையில், பொதுத் தேர்தலை நடத்துவதை மீள்பரிசீலனை செய்யுமாறு, தேர்தல்கள் ஆணையகத்தின் தவிசாளரிடம் கோரிக்கை விடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக, தேசிய மக்கள் சக்தி தெரிவித்தது.
மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைமையில் திசைக்காட்டி சின்னத்தில், தேசிய மக்கள் சக்தியின் கீழ் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்பு மனுவில் இன்று (16) கைச்சாத்திட்டனர்.
மக்கள் விடுதலை முன்னணின் தலைமைக் காரியாலயத்தில், நடைபெற்ற இந்நிகழ்வின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
தற்போதுள்ள சூழ்நிலையில் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவது, சுதந்திரமான நியானமானத் தேர்தலாக அமையாது என்றும் அனைத்துக் கட்சிகளுக்கும் தேர்தல் பிரசாரங்களை சரிசமமாக நடத்த முடியாது என்றார்.
பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்ய இயலாமை, அவ்வாறு கூட்டங்களை ஏற்பாடு செய்தாலும் அது நோய்த்தொற்றுப் பரவுவதற்கு வழிவகுக்கும் என்பதால், அடுத்த இரண்டு வாரங்களுக்கு அனைத்துப் பொதுக்கூட்டங்களும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், எனவே, இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையகம் கருத்திற்கொண்டு, ஆணையகத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தவேண்டும். அதற்கான உரிமை ஆணையகத்துக்கு உண்டு என்றார்.
இதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் அனைத்துப் பிரசாரக்கூட்டங்கள், வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்வது போன்ற சகல செயற்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன என்றார்.
இதேவேளை, நாட்டுக்குள் கொரோனா வைரஸ் ஊடுருவதைத் தடுப்பதற்குத் தேவையான சரியான நடவடிக்கையை எடுப்பதற்கு, அரசாங்கம் தவறிவிட்டது இலங்கை ஒரு தீவாகவிருந்தும் அதையும் மீறி வைரஸ் பரவியுள்ளது. அதனையும் தடுப்பதற்கு, அரசாங்கம் தவறிவிட்டது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago