2025 மே 19, திங்கட்கிழமை

முகத்துவார நீர் கடலில் சங்கமித்தது

Freelancer   / 2022 நவம்பர் 10 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மைய நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக நந்திக்கடல் நீரேரியின் நீர்மட்டம் அதிகரித்து வட்டுவாகல் பாலத்திற்கு மேலாக நீர் பாய ஆரம்பித்துள்ளது.

இதனை கருத்திற்கொண்டு கடந்த வியாழக்கிழமை மாவட்ட செயலகத்தில் குறித்த விடயம் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் மற்றும் நேற்று மாலை மாவட்ட நீரியல் மற்றும் கடற்றொழில் வள அலுவலகத்தில் மீனவ, விவசாய பிரதிநிதிகளிற்கிடையிலான சந்திப்பில் எட்டப்பட்ட முடிவுகள் மாவட்ட அரசாங்க அதிபருக்கு தெரியப்படுத்தியதன் பிரகாரம் வட்டுவாகல் முகத்துவார பகுதி நேற்று (09) மாலை 5.00 மணியளவில் முல்லைத்தீவு கடலுடன் வெட்டி இணைக்கப்பட்டுள்ளது.

தாழ்நிலங்கள் மற்றும் பெரும்போகத்திற்காக விதைக்கப்பட்டுள்ள பல வயல்களும் வெள்ளத்தில் மூழ்குவதாக பொதுமக்களும், விவசாயிகளும் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க நந்திக்கடலுடன் சங்கமிக்கும் பகுதியான வட்டுவாகல் முகத்துவார பகுதியே இவ்வாறு வெட்டப்பட்டு கடலுடன் சங்கமிக்க விடப்பட்டுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X