2025 ஜூலை 05, சனிக்கிழமை

முதற்தடவையாக கூடும் விசாரணைக் குழு

Editorial   / 2018 டிசெம்பர் 12 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற அமர்வுகளின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்ட குழப்பகார நடவடிக்கை தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழு இன்று முதற்தடவையாக கூடவுள்ளது.

இதுதொடர்பில் விசாரணையை முன்னெடுக்கும் பொலிஸ் குழுக்களின் பிரதானிகளையும் நாடாளுமன்றத்துக்கு அழைக்க நாடாளுமன்றக் குழு தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவித்துள்ளன.

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பொலிஸ் விசாரணைகளின் நிலைக் குறித்து விசாரிக்கவே பொலிஸ் பிரதானிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் ஆராய பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையிலான குழுவொன்று சபாநாயகர் கரு ஜயசூரியவால் நியமிக்கப்பட்டுள்ளதுடன், இந்தக் குழுவில் சமல் ராஜபக்ஸ, ரஞ்சித் மத்தும பண்டார, சந்ரசிறி கஜதீர, பிமல் ரத்னாயக்க மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .