Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 07 , மு.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தாண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு, நாளை செவ்வாய்க்கிழமை (8) பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமாகும்.
அன்றையதினம், பொதுமக்கள் கலரிகள் மற்றும் சபாநாயகர் கலரி ஆகியன திறக்கப்படுமென, படைக்கல சேவிதர் திணைக்களம் அறிவித்துள்ளது.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதிக்குப் பின்னர், நாட்டில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடி நிலைமையை அடுத்து, நாடாளுமன்றம் கூட்டப்பட்டபோது, சபைக்குள் ஏற்பட்டிருந்த அமளிதுமளி காரணமாக, மேற்குறிப்பிட்ட கலரிகள் யாவும் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, 2019ஆம் ஆண்டு மீதமிருக்கும் மாதங்களுக்கான வரவு-செலவுத்திட்ட யோசனைகள், மார்ச் மாதம் 5ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இதற்கான நிதியொதுக்கீட்டு சட்டமூலம், பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும். வரவு-செலவுத்திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு, ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி இடம்பெறும். வரவு-செலவுத்திட்டத்துக்கான நிதியொதுக்கீட்டுச் சட்டமூலம், பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும்.
இந்நிலையில், மாகாண சபைகளுக்கான தேர்தலை பழைய முறைமையின் கீழ் நடத்துவதற்கு, அண்மையில் நடைபெற்ற கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டது. எனினும், பழைய முறைமையின் கீழ் தேர்தலை நடத்தவேண்டுமாயின், நிறைவேற்றப்பட்டுள்ள கட்டளைச் சட்டங்களை இரத்துச்செய்யவேண்டும்.
நாளைய நாடாளுமன்ற அமர்வு தொடர்பிலான கட்சித் தலைவர்களின் கூட்டம் ஏற்கெனவே நடத்தப்பட்டாலும், நாளைக் காலையும் கட்சித்தலைவர்களின் கூட்டம் நடத்தப்படும் என்றும் அதன்போதே இறுதித் தீர்மானம் எட்டப்படும் என்றும் அறியமுடிகின்றது
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
58 minute ago
04 Jul 2025