2025 ஒக்டோபர் 30, வியாழக்கிழமை

முதியவரின் தலைபகுதி வாவியில் இருந்து மீட்பு

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 26 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடியில் காணாமல்  போன  முதியவர் ஒருவரின் தலைப் பகுதி காத்தான்குடி வாவியில் இருந்து சனிக்கிழமை (25) மாலை  மீட்கப்பட்டுள்ளது. 

காத்தான்குடி 6 இல் வசிக்கும்  66 வயதுடைய அப்துல் ராசிக்  எனும் முதியவர்  வெள்ளிக்கிழமை (23) அன்று காலை 8:30 மணிக்கு வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் திரும்ப வீடு வந்து சேராததால் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்து அவரை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன.

அதற்கமைய குறித்த முதியவரின் சடலத்தின் தலைப் பகுதி காத்தான்குடி 5  இல் உள்ள வாவியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது .

இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் மீட்கப்பட்ட தலைப்பகுதி மட்டக்களப்பு போதனா  வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

குறித்த நபரை வாவிக்கரையோரம் உள்ள முதலை இழுத்துச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

எம். எஸ். எம். நூர்தீன் 

 

 

 

 

 

 

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X