2024 மே 03, வெள்ளிக்கிழமை

முன்கூட்டிய பிணை மனு நிராகரிப்பு

Editorial   / 2019 ஜூலை 17 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எவன்காட் சம்பவத்துடன் தொடர்பில், தன்னைக் கைதுசெய்வதைத் தடுக்கக் கோரி, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திசாநாயக்க விடுத்த முன்கூட்டிய பிணை மனுவை நிராகரிக்க, கொழும்பு கோட்டை நீதவான ரங்க திசாநாயக்க இன்று உத்தரவிட்டுள்ளார்.

எவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி, பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திசாநாயக்க உள்ளிட்ட 8 பேரை கைதுசெய்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு, சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபரிடம் அறிவித்துள்ளார்.

இதற்கமைய, செயலாளர் சமன் திசாநாயக்கவால், கைதுசெய்வதைத் தடுக்கக் கோரி, மனுத்தாக்கல் செய்திருந்ததுடன், இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, நீதவானால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஆயுதங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் இடம்பெறும் குற்றங்கள் ​தொடர்பில், பிணை வழங்குவதற்கான அதிகாரம் நீதவான் நீதிமன்றத்துக்கு இல்லையென, நீதவான் அறிவித்துள்ளதுடன், இந்த முன்கூட்டிய பிணை மனுவையும் நிராகரித்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .