Niroshini / 2021 மே 07 , மு.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்டத்தில், மகாவலி அதிகார சபையால் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்ட நில சுவீகரிப்பு நிறுத்தப்படும் என்று, துறைசார் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ, தமிழ்த் தேசிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் உறுதியளித்துள்ளார்.
கல்முனை பிரதேச செயலக விவகாரம் தொடர்பான விசேட சந்திப்பொன்று, தமிழ்த் தேசிய கட்சிகளின் எம்.பிக்களுக்கும் இராஜாங்க அமைச்சருக்கும் இடையே நேற்று முன்தினம் (05) கொழும்பில் இடம்பெற்றது. இதன்போதே, அவர், இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில், அமைச்சர்கள், செயலாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று பார்வையிட்டுக் கருத்தறிந்து, இறுதி முடிவு எட்டப்படும் என்று தங்களால் ஏற்கெனவே உறுதியளிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த உத்தரவாதத்தை மீறியே மகாவலி அதிகார சபை செயற்பட முனைகின்றது என, தமிழ் எம்.பிக்கள், இராஜாங்க அமைச்சரிடம் சுட்டிக்காட்டினர்.
இதைச் செவிமடுத்த சமல் ராஜபக்ஷ, குறித்த பகுதிக்கு எம்மால் நேரில் பயணித்து அது தொடர்பான இறுதி முடிவு எட்டப்படும் வரையில், மகாவலி அதிகார சபையின் செயற்பாட்டை நிறுத்துமாறு செயலாளர் ஊடாகக் கடிதம் அனுப்பப்படும் என உத்தரவாதம் வழங்கினார்.
இந்தச் சந்திப்பில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி என்பவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
24 minute ago
31 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
31 minute ago
42 minute ago