Editorial / 2021 மே 08 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை: தமிழகத்தில் மே 10ஆம் திகதிமுதல், 2 வாரங்களுக்கு முழு லொக்டவுன் அமல்படுத்தப்படுகிறது.
இதனையடுத்து இன்றும் நாளையும் இரவு 9 மணிவரை கடைகள் முழுமையாக செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று( 08)வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
மாநிலம் முழுவதும் அமலில் இருக்கும் முழு ஊரடங்கின் போது கீழ்க்கண்ட செயல்பாடுகள் மட்டும் அனுமதிக்கப்படும்.
அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம்,
தினசரி பத்திரிகை விநியோகம்,
தனியார் விரைவுத் தபால் சேவை,
மருத்துவமனைகள்,
மருத்துவ பரிசோதனைக் கூடங்கள்,
மருந்தகங்கள், ஆம்புலன்ஸ்
அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள்,
அனைத்து சரக்கு வாகனங்கள் போக்குவரத்து,
விவசாயிகளின் விளை பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள், ஒக்சிசன் வாயு எடுத்துச் செல்லும் வாகனங்கள்,
எரிபொருளை எடுத்துச்செல்லும் வாகனங்கள் ஆகியவை முழு ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும்.
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago