2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மே 9 வன்முறை விவகாரம்: 664 பேர் கைது

Freelancer   / 2022 மே 18 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மே மாதம் 9 ஆம் திகதி மற்றும் அதற்குப் பின்னரான நாட்களில் நாட்டில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் மேலும் 258 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ, நேற்று (17) தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் மொத்தமாக 664 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேச்சாளர் குறிப்பிட்டார்.

அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை தொடர்ந்து 43 பேருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் பலரை மன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கடந்த வாரம் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் சட்டமா அதிபரின் பணிப்புரையின் அடிப்படையில் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் விசாரணை நடத்துவதற்கு சபாநாயகரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

எம்.பி.க்களுக்கு எதிராக போதிய ஆதாரம் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.

அவர்கள் நேற்றையதினம் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டிருந்தால், குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அவர்களைப் பணிக்கும் படி சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .