2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மே 9 வன்முறை விவகாரம்: அப்பாவிகளை கைது செய்யாதீர்கள்

Freelancer   / 2022 மே 18 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி பதிவாகிய வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் அப்பாவிப் பொதுமக்களை கைது செய்வது வீண் என தெரிவித்த முன்னிலை சோசலிசக் கட்சியின் செயலாளர் புபுது ஜாகொட, வன்முறையை திட்டமிட்டு தூண்டியவர்களையே கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

மாநகர சபை உறுப்பினரைக் கைது செய்வதற்கு முன்னர், அலரிமாளிகைக்கு முன்பாக வன்முறையைத் தூண்டிய நபர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்றார்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் சனத் நிஷாந்த, பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் குண்டர்கள் மூலம் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தினார்.

ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதிலிருந்தும், அவசரகாலச் சட்டத்தை தொடர்வதிலிருந்தும் அரசாங்கம் விலகியிருக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், இவ்வாறான நடவடிக்கைகள் பொதுமக்களை அச்சுறுத்துவதற்கும் அச்சத்தை ஏற்படுத்துவதற்குமான நடவடிக்கைகளாகும் என்றும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .