J.A. George / 2021 செப்டெம்பர் 13 , மு.ப. 08:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட அமெரிக்காவின் “பைசர்” தடுப்பூசியில் மேலுமொரு தொகை, நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
கட்டார் விமான சேவைக்குச் சொந்தமான பொருள்கள் ஏற்றியிறக்கும் விமானத்தின் ஊடாகவே 73,710 தடுப்பூசி மருந்துகள், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டன.
445 கிலோகிராம் நிறையைக் கொண்ட இந்த தடுப்பூசி மருந்துகள் பொதியிடப்பட்டு, நெதர்லாந்து ஆம்ஸ்ட்டர்ஸ்டேம் நகரத்திலிருந்து கட்டார், தோஹாவுக்கு விமானத்தின் மூலமாக கொண்டுவரப்பட்டது.
அங்கிருந்து கட்டார் விமானச் சேவைக்குச் சொந்தமான கிவ்.ஆர்-668 எனும் பொருள்களை ஏற்றியிறக்கும் விமானத்தின் ஊடாக, இன்று (13) அதிகாலை 2.15க்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago