2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு தானாக திறந்துகொண்டது

Editorial   / 2018 ஒக்டோபர் 22 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மலைநாட்டில் மேற்கு சாயலில், கடந்த சில நாள்களாக பெய்துவருகின்ற அடைமழையினால், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவொன்று தானாக திறந்துகொண்டது என நீர்த்தேக்கத்துக்குப் பொறுப்பான பொறியியலாளர் தெரிவித்தார்.

அந்த நீர்த்தேக்கத்தில் ஐந்து வான்கதவுகள் உள்ளன. அதிலொன்றே இவ்வாறு திறந்துகொண்டுள்ளது.

வான்கதவு திறந்துகொண்டமையை அடுத்து, கொத்மலை ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துவிட்டது. ஆகையால், இந்த ஓயாவின் நீரை பயன்படுத்துகின்ற மக்கள் விழிப்புடன் இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு கேட்டுகொண்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .