Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2025 ஜூன் 19 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவரும் இரண்டு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி நளின் ரொஹாந்த அபேசூரிய ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் வியாழக்கிழமை (19) முற்பகல் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
இதேவேளை, மேல் நீதிமன்ற நீதிபதி தொன் பிரான்சிஸ் ஹத்துருசிங்க குணவர்தன மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய காந்த மத்தும படபெந்திகே ஆகியோர் புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் வியாழக்கிழமை (19) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்துகொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .