2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

மோசமடைந்து வரும் அரசியல் கைதிகளின் உடல்நிலை

Editorial   / 2018 செப்டெம்பர் 24 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துவரும் அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகளின் உடல்நிலை  மோசமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் அரசியல் கைதிகளில் நான்கு பேர் கடந்த சனிக்கிழமை அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் இருவர் சிகிச்சைப்​ பெற்று திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், ஏனைய நான்கு அரசியல் கைதிகளும், சிறைச்சாலையில் தொடர்ந்தும், உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களை குறுகிய காலத்தில் புனர்வாழ்வு வழங்கி, விரைவாக விடுதலை  செய்ய வேண்டும் என கோரியே 8 அ​ரசியல் கைதிகள் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X