2024 ஜூன் 17, திங்கட்கிழமை

யாத்ரீகர்கள் சென்ற வேன் விபத்து: ஒருவர் பலி

Mayu   / 2024 மே 26 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதெனிய அனுராதபுரம் வீதியில் கல்கமுவ பலுகடவல சந்திக்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பத்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குருநாகலிலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த யாத்ரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் காயமடைந்தவர்கள் கல்கமுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் நால்வர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சாரதிக்கு நித்திரை ஏற்பட்டமையே விபத்துக்கான காரணம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X