2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

யாலவில் ஜீப் கவிழ்ந்ததில்: நான்கு பேர் காயம்

Editorial   / 2025 டிசெம்பர் 15 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

யால நுழைவு சாலையில் உள்ள அதுல்ல பகுதியில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஜீப் ஒன்று கவிழ்ந்ததில்   ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக கிரிந்த பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த சுற்றுலாப் பயணிகளை உள்ளூர்வாசிகள் டெபரவெவ அடிப்படை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

 நான்கு சுற்றுலாப் பயணிகளும் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், அவர்களின் நிலைமை மோசமாக இல்லை என்றாலும், அவர்கள் தற்போது டெபரவெவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜீப்பின் சாரதி வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், ஜீப்பின் சாரதி கிரிந்திவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கிரிந்த பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .