2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

யாழ். அனலைதீவில் ஆயுதங்கள் மீட்பு

Editorial   / 2026 ஏப்ரல் 08 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

   பு.கஜிந்தன்

அனலைதீவு பகுதியில் துருப்பிடித்த நிலையில் கைக்குண்டு ஒன்றும், துப்பாக்கி ஒன்றும் இன்று (08) கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது அனலைதீவு பகுதியில் உள்ள காணி ஒன்றினை அதன் உரிமையாளர் இன்று துப்பரவு செய்துள்ளார். இதன்போது, மண்ணுக்குள் புதையுண்ட நிலையில் காணப்பட்ட கைக்குண்டு மற்றும் துப்பாக்கியை அவர் அவதானித்துள்ளார்.

இது குறித்து உடனடியாக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர்.

மீட்கப்பட்ட வெடிபொருட்களை நீதிமன்ற அனுமதியுடன் செயலிழக்கச் செய்வதற்கும், அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்குமான மேலதிக நடவடிக்கைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .