2025 செப்டெம்பர் 11, வியாழக்கிழமை

யாழில் குளவி கொட்டிய பெண் பலி

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 11 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் பகுதியில் குளவி கொட்டியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை வித்தகபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வநாயகம் பாலசரஸ்வதிஎன்ற 82 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் தனது வீட்டின் பின்னால் உள்ள குளவி கூடு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

சிகிச்சைக்காக தெல்லிப்பழை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண், அங்கு உயிரிழந்தார்.

அதன் படி மரணம் தொடர்பான பிரேத பரிசோதனையை  நமசிவாய பிரேம்குமார் மேற்கொண்டுள்ளார்.

சம்பவம் குறித்து தெல்லிப்பழை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .