2025 ஜூலை 17, வியாழக்கிழமை

யானை தந்தங்கள் மற்றும் ஹெரோய்னுடன் நபர் கைது

Editorial   / 2018 செப்டெம்பர் 26 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு  - தெமட்டகொடை பகுதியில் வைத்து நான்கு யானை தந்தங்கள் மற்றும் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து கஜமுத்துக்கள் கொண்ட யானை தந்தங்களாக இருக்குமென சந்தேகிக்கப்படும் 4 யானை தந்தங்களும் அத்தோடு, 4 கிராம் ஹெரோய்ன் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவித்தப் பொலிஸார், இன்று (26) குறித்த நபரை மாளிகாகந்த
நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவித்தனர்.

மேலும், குறித்த சந்தேகநபர் தெமட்டகொடை பிர​தேசத்தைச் சேர்ந்த 21 வயதுடையவரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X