2025 ஜூலை 14, திங்கட்கிழமை

யானைகளை பாதுகாப்பது தொடர்பான அறிக்கை அமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளது

Editorial   / 2018 ஒக்டோபர் 25 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

யானைகளை பாதுகாப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய பரிந்துரைகள்  தொடர்பான அறிக்கை போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வாவிடம் இன்று கையளிக்கப்படவுள்ளது.

இதுதொடர்பாக  ஆராயந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக 14 உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று நிமல் சிறிபால டீ சில்வாவால் நியமிக்கப்பட்டது.

குறித்த குழுவானது திருகோணமலை, மட்டக்களப்பு, அநுராதபுரம், தலைமன்னார், மற்றும் காங்கேசன்துறை ரயில் வீதிகைளை அண்மித்த பகுதிகளில் தமது கண்காணிப்பு பணிகளை முன்னெடுத்திருந்தன.

இந்த கண்காணிப்புக்கு அமைய, யானைகளின் நடவடிக்கைகள் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்கள் தொடர்பான தகவல்களும் குறித்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ரயில்களில் யானை மோதல்களை தடுப்பது குறித்த பரிந்துரையும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .