2025 ஜூலை 05, சனிக்கிழமை

யாழில் வீடொன்றின் மீது தாக்குதல்

Editorial   / 2019 பெப்ரவரி 12 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றை சிலர் தாக்கி சேதபடுத்தியுள்ளதோடு, அங்கிருந்த வான் ஒன்றையும் தீக்கிரையாக்கிவிட்டு சென்றுள்ளனர்.

நேற்று (11) இரவு குறித்த பகுதிக்கு வந்த சிலரே இவ்வாறான செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், வீட்டின் உரிமையாளர் கொந்துராத்து ​தொழிலை செய்பவரென்றும், அவருக்கு கீழ் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு நீண்ட நாள்களாக சம்பளம் வழங்காமல் இருந்து வந்த நிலையில், குறித்த நபருக்கும் ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட முறுகல் நிலை தொடர்ந்து சென்ற​மையால், இவ்வாறான செயல்களில் குறித்த நபர்கள் ஈடுபட்டதாகத் தெரிவித்தனர்.

மேலும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக  மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .