R.Tharaniya / 2025 நவம்பர் 17 , பி.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட இரண்டாம் வருட பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஊவா பரனகம பிரதேசத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (16) அன்று யாழ் கந்தர்மடம் பகுதியில் கைது செய்யப்பட்டார்.
24 வயதுடைய குறித்த மாணவனிடம் இருந்து 33 கிராம் 230 மில்லிக்கிராம் ஹசீஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது
மேற்படி சந்தேக நபரை திங்கட்கிழமை (17) அன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை எதிர்வரும் 30 திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நிதர்சன் வினோத்
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago