Editorial / 2021 மே 30 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்திலுள்ள மதுபானசாலைகள் மீளவும் அறிவிக்கும் வரையிலும் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பொதுமக்கள் சுகாதார பரிசோதகர் அலுவலகர்கள் விடுத்துள்ள கோரிக்கைக்கு அமைவாகவே சீல் வைக்கப்பட்டுள்ளது.
மதுபானசாலைகள் மூடப்பட்டிருந்த காலப்பகுதியில், மதுபானசாலைகள் உரிமையாளர்கள், மிகவும் சூட்சுமமான முறையில் ஆகக் கூடுதலான விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்துவருகின்றனர் என தகவல்கள் கிடைத்துள்ளன.
அதனையடுத்து எடுக்கப்பட்ட பாதுகாப்பு முன்னேற்பாடு நடவடிக்கையாகவே மதுபானசாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்றும் பொதுமக்கள் சுகாதார பரிசோதகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் பரவியிருக்கும் கொரோனா நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு ஒத்துழைக்குமாறும் மதுபானசாலைகளை திறக்கவேண்டிய நாள் தொடர்பில், விசேடமாக அறிவிக்கப்படும் என்றும் பொதுமக்கள் சுகாதார பரிசோதகர் அலுவலகர்கள் அறிவித்துள்ளனர்.

8 hours ago
9 hours ago
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
15 Dec 2025