2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

யோஷித மற்றும் டெய்சி பாட்டிக்கு பிணை

Freelancer   / 2025 ஏப்ரல் 04 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஆகியோருக்கு குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டதன் பின்னர், அவர்களை பிணையில் விடுவிக்க கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (4) உத்தரவிட்டது. 

இதன்போது பிரதிவாதிகளை 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகள் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே முன்னிலையில் கையளிக்கப்பட்டன. 

மேலும், இது தொடர்பான விரிவான விசாரணைகளை மே 30 ஆம் திகதி நடத்துவதாக நீதிமன்றம் உத்தரவிட்டது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .