2025 மே 19, திங்கட்கிழமை

ரூ.12.5 கோடி இலஞ்சம்: சுங்க அதிகாரிகளுக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

12.5 கோடி ரூபாவை இலஞ்சமாக பெறும் போது, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட சுங்கப்பிரிவு அதிகாரிகள் மூவரையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சுங்க அதிகாரி சுதீர பராகிரம ஜினதாஸ, பிரதி சுங்க பணிப்பாள்ர் ஜகத் குணதிலக்க மற்றும் உதவி சுங்க அதிகாரி எம். டீ. யு. ஜி. பெரேரா ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு செலுத்தவேண்டிய 150 கோடி ரூபாய், சுங்க கட்டணத்தை செலுத்தாமல் விடுவதற்காக சுங்க அதிகாரிகள் ரூவரும் 12.5 கோடி ரூபாவை இஞ்சமாக கேட்டிருந்ததாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X