Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 12, வியாழக்கிழமை
Thipaan / 2016 செப்டெம்பர் 18 , பி.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகனான நவின் கனிஸ்க அபேகுணவர்தன செலுத்திச் சென்ற அதிசொகுசுக் கார் மோதியதில், 27 வயதான ஒருவர் பலியாகியதுடன், 28 வயதான ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹிக்கடுவ, கொனபீனுவெல பகுதியில், சனிக்கிழமை இரவு இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், குடி போதையில் வாகனம் செலுத்தியமை, ஒருவரைக் கொலை செய்தமை, ஒருவரை படுகாயமடையச் செய்தமை போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் சாரதி அனுமதிப் பத்திரம் இருக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.
படுகாயமடைந்த இருவரும் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், 27 வயதான இளைஞன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறுக்கு வீதியிலிருந்து பிரதான வீதிக்கு வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் கார் மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் இருவர் பயணிக்கக் கூடிய அதிசொகுசு காரில், ஐவர் பயணித்ததாகவும் பொலிஸார் தெரவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட நவின் கனிஸ்க அபேகுணவர்தன, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் சகோதரரின் மகனாவாரர்.
சந்தேகநபரை வத்தேகம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகத் தெரிவித்த தெலிகட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஐ.டி.கமகே, மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
2 hours ago