2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

ராஜிதவுக்கு விளக்கமறியல்

Editorial   / 2025 ஓகஸ்ட் 29 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

!முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

 இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராஜித சேனாரத்ன இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் பதவிக்காலத்தில், கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் மண் அகழும் திட்டத்தை கொரிய நிறுவனத்திற்கு வழங்கிய விவகாரம் தொடர்பானது. இந்த ஒப்பந்தம் காரணமாக அரசுக்கு ரூ. 20 மில்லியனுக்கும் அதிகமான நிதி இழப்பு ஏற்பட்டதாக இஇலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு குற்றம்சாட்டியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .