2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பல பதவிகள்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 28 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சன் ராமநாயக்கவை இன்னும் பாராளுமன்ற உறுப்பினராகவே கருதுவதாகவும், ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்றக் குழுக் கூட்டத்திற்கு அழைப்பதாகவும், அவருக்கு பாராளுமன்றக் குழுவின் நிரந்தர உறுப்புரிமையும், நிறைவேற்றுக் குழுவின் நிரந்தர உறுப்புரிமையும் வழங்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் தலைவராக ரஞ்சன் ராமநாயக்க நியமிக்கப்படுவார் என்றும், இத்துடன் நிற்காது ரஞ்சன் ராமநாயக்கவின் பூரண விடுதலைக்கு ஆகக்கூடிய அர்ப்பணிப்பை மேற்கொள்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நிகவரெட்டிய தொகுதிக் கூட்டம் நேற்று (27) நடைபெற்றது. இதில்  கலந்துகொண்டு எதிர்க்கட்சித் தலைவர் உரையாற்றினார்.  

தற்போது சர்வகட்சி அரசாங்கம் பற்றி ஜனாதிபதி பேசுகின்ற போதிலும் உண்மையில் நடப்பது ஒன்று கூடி நாட்டையே விழுங்கக்கூடிய அனைவரும் உண்ணும் அரசாங்கத்தை உருவாக்குவதே எனவும் அவர் தெரிவித்தார்.

தற்பொழுது நாட்டின் முன்பே 3 கடன் மரணப் பொறிகள் இருப்பதாகவும், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அந்த 3 மரணப் பொறிகளும் தீர்க்கப்பட வேண்டும் என்றும் கூறிய எதிர்க்கட்சித் தலைவர், இது தொடர்பான எந்த வேலைத் திட்டத்தையும் அரசாங்கம் நாட்டுக்கு முன்வைக்கவில்லை என்றும் கூறினார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .