2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

ரணில் விவகாரம்: எதிர்க்கட்சித் தலைவர்கள் அவசரமாக கூடுகின்றனர்

Editorial   / 2025 ஓகஸ்ட் 24 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்க்கட்சித் தலைவர்கள் கொழும்பில் இன்று (24) அவசரமாக  கூடுகின்றனர். "அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை தோற்கடிப்போம்" என்ற கருபொருளிலேயே இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சார்பாக இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.

முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் இந்தக் கூட்டம், கொழும்பில் உள்ள அமரி ஹோட்டலில் இன்று காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X