2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

‘ரணில் கௌரவமாக வெளியேற வேண்டும்’

Editorial   / 2018 ஒக்டோபர் 28 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ரணில் விக்கிரமசிங்க, அலரி மாளிகையிலிருந்து கௌரவமாக வெளியேற வேண்டும் என, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கே, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்கும் என்றும் இதை, எதிர்வரும் 16ஆம் திகதி நிரூபிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

தற்போது, ரணிலுக்கு எதிர்கட்சித் தலைவர் ஆசனமே உரித்துடையதாகியுள்ள நிலையில், அவர் தொடர்ந்தும் அலரி மாளிகையில் தங்கியிருந்தால், மக்களை கட்டுப்படுத்த முடியாமல் போகுமெனவும் அவர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .