Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 ஏப்ரல் 07 , மு.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரயிலுடன் ஜீப் வண்டியொன்று இன்றுக்காலை 7.45க்கு மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானதுடன் மேலும் நான்குபேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேலியகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வத்தளை, ரயில் கடவையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ரம்புக்கனையிலிருந்து கோட்டையை நோக்கி பயணித்துகொண்டிருந்த ரயிலுடனேயே ஜீப் வண்டி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில், ஜீப் வண்டியின் சாரதியும், ரயிலின் மிதிப்பலகைகளில் பயணித்த பயணிகளில் நால்வருமே காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த ஐவரும், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே, அதிலொருவர் மரணமடைந்துள்ளார்.
மரணமடைந்தவர் தொடர்பிலான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .