2025 நவம்பர் 27, வியாழக்கிழமை

ரயில் கடவையில் விபத்து ; ஒருவர் பலி, ஒருவர் காயம்

Janu   / 2025 நவம்பர் 27 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலாபம் பண்டாரவத்தை பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் வைத்து சிறிய லொறியொன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்து, மற்றொருவர் காயமடைந்த சம்பவம் புதன்கிழமை (26) அன்று நிகழ்ந்துள்ளது.

லுனுவில பண்டிரிப்புவ பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய எல்.ஜி. அருண கயந்த குமார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  

காயமடைந்த சிலாபம் அதுவான பகுதியைச் சேர்ந்த எஸ். குமார ஜோதி என்பவர் சிகிச்சைக்காக சிலாபம் பொது  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காக்க பள்ளி - சவரன ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் வைத்து கொழும்பிலிருந்து சிலாபம் நோக்கிச் சென்ற மின்சார ரயிலுடன், மோதி இவ் விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தின் போது மழை பெய்து கொண்டிருந்துள்ளதுடன் , லொறி கவனக்குறைவாக ரயில் கடவையைக் கடந்ததால் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  

இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையில்  வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எம்.யூ.எம்.சனூன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X