2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

ரயிலில் மோதி உயிரிழந்த ஆணின் பாகங்கள் மீட்பு

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 29 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எஸ்.ஆர்.லெம்பேட்

தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி உடல் அவயவயங்கள் துண்டாடப்பட்ட நிலையில்,  ஞாயிற்றுக்கிழமை (28) அன்று காலை சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட நபர், நீர்கொழும்பைச் சேர்ந்த W.M.A. சரத் அந்தோனி (வயது-60) என தெரியவந்துள்ளது.

தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி ஞாயிற்றுக்கிழமை (28) அன்று காலை பயணித்த குறித்த புகையிரதம், சௌத் பார் புகையிரத நிலையத்தில் தரித்து நின்று மீண்டும் பயணிகளை ஏற்றிக்கொண்டு கொழும்பு நோக்கி பயணித்துள்ளது.

 சௌத்பார் -தள்ளாடி புகையிரத வீதி, இரட்டை கண் பாலத்திற்கு அருகில் புகையிரதத்தில் மோதி உடல் பாகங்கள் சிதறிய நிலையில் குறித்த சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

 சம்பவ இடத்திற்கு வந்த திடீர் மரண விசாரணை அதிகாரி பி.பிரபா நந்தன் சடலத்தை பார்வையிட்டார்.

இதன் போது அவரது உடமையில் இருந்து மீட்கப்பட்ட தேசிய அடையாள அட்டை,சாரதி அனுமதிப்பத்திரம் ஆகியவற்றை வைத்து குறித்த நபர்  W.M.A. சரத் அந்தோனி (வயது-60) எனவும் நீர்கொழும்பைச் சேர்ந்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டது .

அவரது  உடமையில் இருந்து ஒரு தொகை பணம் மற்றும்   தலைமன்னாருக்கு சனிக்கிழமை (27) அன்று  பயணிப்பதற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட 205 ரூபாயாக்கான  புகையிரத டிக்கெட் ஒன்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சடலம் மன்னார் பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைகளை மன்னார் வைத்தியசாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X