2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

ரயிலில் மோதி சிறுவன் பலி

Janu   / 2025 செப்டெம்பர் 28 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற ரயிலில் மோதி 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

மெதகம பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுவன், தனது நண்பர்களுடன் ரம்புக்கனையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலில் திஸ்மல்பொல ரயில் நிலையத்திற்கு வந்து இறங்கிய நிலையில் நடைமேடைக்கு பதிலாக ரயில் பாதையில் காலடி வைத்துள்ளார்.

இதன்போது குறித்த சிறுவன் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது ரயிலுடன் மோதியுள்ளார் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ரம்புக்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X