2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ரயிலில் சிக்கிய நால்வரில் இருவர் ஸ்தலத்திலேயே பலி

Editorial   / 2018 செப்டெம்பர் 28 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோட்டையிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த கடுகதி ரயிலில் மோதுண்டு, இருவர் நேற்று (27) உயிரிழந்தனரென, பொலிஸார் தெரிவித்தனர். றாகம ரயில் குறுக்கு வீதிக்கருகில், நேற்றுக் காலை 8.00 மணியளவில், இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.  

குறித்த வீதியில் பயணித்த நால்வர், ரயிலில் மோதுண்டு காயமடைந்த நிலையில், றாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இருவர், அதன் பின்னர் உயிரிழந்தனடிலன, றாகம பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவத்தில், ஆணொருவரும் பெண்ணொருவருமே, இவ்வாறு உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த மேலும் இருவர், தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனரென, பொலிஸார் தெரிவித்தனர். 

இதேவேளை, ரயில் குறுக்கு வீதிகளில் பயணிக்கும் போது, அதில் பயணிப்பதா, இல்லையா என்ற அவதானத்துடன் பயணத்தை ஆரம்பிக்க வேண்டுமென, வீதிப் பாதுகாப்புத் தொடர்பான தேசிய சபை, மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

ரயில் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால், ரயில் குறுக்கு வீதிகளை அண்மித்த இடங்களில், விழிப்புணர்வு அறிவிப்புப் பலகைகளைப் பொருத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென, வீதிப் பாதுகாப்புத் தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்தார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X