2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

ரவிராஜ் கொலைச் சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Menaka Mookandi   / 2016 ஏப்ரல் 06 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலை தொடர்பில் கைதாகியுள்ள சந்தேகநபர்கள் நால்வரையும், எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம், இன்று உத்தரவு பிறப்பித்தது.

ரவிராஜ் எம்.பி, தனது இல்லத்திலிருந்து அலுவலகத்தை நோக்கிச் செல்லும் வழியில், 2006ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் திகதி,   காலை எட்டு மணியளவில், மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஆயுததாரியினால் கொழும்பு -8, எல்விட்டிகல மாவத்தை மாதா ரோட் சந்தியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ரவிராஜ் அன்று காலை 9.20 மணிக்கு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த வழக்குத் தொடர்பில், கடற்படை வீரர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டதுடன், கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் முச்சக்கர வண்டியையும் பொலிஸார்  கைப்பற்றியிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X