Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 26 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் வீட்டை, ட்ரோன் கெமரா மூலம் வீடியோப் பதிவு செய்ததாகக் கூறப்படும் இருவரை,அந்த ட்ரோன் கெமராவுடன் கைது செய்ததாக, தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர், வனவளத்துறைத் திணைக்கள அதிகாரியென்றும் மற்றையவர், ட்ரோன் கெமரா இயக்குநர் என்றும், பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நாடாளுமன்ற வீதியில் அமைந்துள்ள தனது வீட்டை, ட்ரோன் கெமரா மூலம் வீடியோப் பதிவு செய்வதாக, ரவி கருணாநாயக்க எம்.பியினால், நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டிருந்ததை அடுத்து, அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக, சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்திருந்த நிலையிலேயே, மேற்படி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், வனவளத்துறைத் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் மரக்கன்று நடும் வேலைத்திட்டத்துக்குத் தேவையான வீடியோப் பதிவொன்றே செய்யப்பட்டதாகவும் இதற்காக, ட்ரோன் கெமரா மூலம் வீடியோப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், கைதானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ட்ரோன் கெமராவொன்றை வானில் செலுத்துவதாயின், சிவில் விமானச் சேவை அதிகாரியின் அனுமதியைப் பெறவேண்டும் என்பதோடு, அது தொடர்பில், உரிய பொலிஸ் நிலையத்துக்கும் அறிவித்திருக்க வேண்டும். இருப்பினும், இவ்வாறான நடைமுறையை, உரிய திணைக்கள அதிகாரி பின்பற்றியிருக்கவில்லையென, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், கைதான அதிகாரி உட்பட இருவரையும், அவர்களுடைய ட்ரோன் கெமராவுடன், இன்றைய தினம் (26) கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென, பொலிஸார் மேலும் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
3 hours ago
4 hours ago